திண்டுக்கல் மாவட்டத்தில் கோயம்புத்தூர் செல்லும் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மலை மீது எழுந்தருளியிருப்பது பழனி ஆண்டவர். திருவாவினன்குடி பழநி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் இரண்டையும் சேர்த்து பழநி என்றே மக்கள் வழிபட்டு வருகின்றனர். மலை அடிவாரத்தின் வடகிழக்கில் முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை என்ற தீர்த்தம் உள்ளது. இம்மலை சுமார் 450 அடி (135 மீ) உயரமுடையது. 769 படிகள் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் கோவணம் மட்டும் தரித்து தண்டாயுதபாணி சுவாமியாய் ஒரு கரத்தை இடுப்பில் ஊன்றியும் மற்றெhரு கரத்தில் திருத்தண்டினைத் தாங்கியும் மேற்கு நோக்கி நின்று காட்சியளிக்கின்றhர். இந்த சிலை நவ பாஷாணம் என்னும் 9 வகையான இயற்கை மூலிகைகளைக் கொண்டு போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதல் தங்கரதம் இந்த கோயிலில் தான் உருவாக்கப்பட்டது. பங்குனி உத்திரப் பெருவிழா, தைப்பூசம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. |